ஐயோ… நண்பனின் மனைவியுடன் தொடர்பா?… தட்டிக் கேட்ட கணவர்… தடுக்க வந்த இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்… தருமபுரியில் திடுக்கிடும் பின்னணி…!

By Swetha on கார்த்திகை 5, 2026

Spread the love

தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், தடுக்க வந்த மற்றொரு நண்பர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகேஸ்வரி என்பவரைத் திருமணம் செய்துகொண்ட தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுநர் சித்தேஸ்வரனுக்கும், அவரது நண்பரான சூர்யாவுக்கும் இடையே மகேஸ்வரியின் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாகப் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இது தொடர்பான ஆடியோ ஆதாரங்களைக் குணசேகரன் என்ற நண்பர் சித்தேஸ்வரனிடம் கொடுக்கவே, நண்பர்களுக்கு இடையே கடும் விரோதம் ஏற்பட்டுள்ளது.

   

இந்நிலையில், சி.எம்.புதூர் பகுதியில் நண்பர்கள் அனைவரும் ஒன்றாக மது அருந்தும்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், சூர்யா மறைத்து வைத்திருந்த கத்தியால் சித்தேஸ்வரனைத் தாக்க முயன்றுள்ளார். அந்த மோதலைத் தடுத்து விலக்க முயன்ற குணசேகரன் மீது எதிர்பாராதவிதமாக கத்தி பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்; மற்றொரு நண்பரான திருமூர்த்தி காயமடைந்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், குற்றவாளி சூர்யா பாலக்கோடு நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.