ரூ.400 கோடி கைமாறியதா?… அம்பலமான ரகசியங்கள்… சிறையில் அன்பில் மகேஷ்… வெளியே சல்லடை போடும் போலீஸ்… சிக்கிய முக்கிய ஆவணங்கள்…!!

By Gayathri on கார்த்திகை 1, 2026

Spread the love

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவதற்கு சுமார் ரூ.400 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்ற உத்தரவின்படி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி காவல்துறையினர் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை மற்றும் உத்தரவு தொடர்பான நடவடிக்கைகள் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

   

இவ்வழக்கு தொடர்பாக அன்பில் மகேஷின் வீடு மற்றும் அவருக்குத் தொடர்புடைய இடங்களில் முன்னதாக நடத்தப்பட்ட சோதனைகளில் வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. தற்போது, முறைகேடு தொடர்பாகக் கைப்பற்றப்பட்ட அவரது வங்கி கணக்கு விவரங்களையும் பணப் பரிவர்த்தனைகளையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.