தமிழகத்தில் மகளிருக்கான உரிமைத் தொகையை உயர்த்தி வழங்குவதற்கான பூர்வாங்கப் பணிகளை முதலமைச்சர் விஜய் தீவிரப்படுத்தியுள்ளதாக அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார். ராஜபாளையத்தில் நடைபெற்ற வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி மகளிருக்கு மாதந்தோறும் ரூ.2,500 வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது எனக் குறிப்பிட்டார்.
தற்போது நடைமுறையில் இருக்கும் ரூ.1,000 உரிமைத் தொகை திட்டத்தில் பல்வேறு தகுதியுடைய பயனாளிகள் விடுபட்டது மற்றும் நிர்வாக ரீதியான குளறுபடிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இத்தகைய குறைபாடுகளைக் களைந்து, தகுதியான அனைத்து மகளிரும் பயனடையும் வகையில் திட்டத்தைச் சீரமைத்து, உயர்த்தப்பட்ட தொகையான ரூ.2,500-ஐ விரைவில் வழங்கும் பணிகள் முடுக்கவிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் உறுதியளித்தார்.
