எப்போதுதான் முடிவு?… தெருவில் விளையாடிய குழந்தை… கண் இமைக்கும் நேரத்தில் நடந்த கோரம்… பதறவைக்கும் சம்பவம்…!!

By Gayathri on ஐப்பசி 31, 2026

Spread the love

கர்நாடக மாநிலம் கலபுரகி பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த நான்கு வயது சிறுவனை தெருநாய்கள் கூட்டம் திடீரென கொடூரமாகத் தாக்கின. நாய்களின் பிடியில் சிக்கி படுகாயமடைந்த அச்சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து நாய்களை விரட்டினர். எனினும், பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அச்சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெருநாய்களின் அட்டகாசத்தைக் கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுபோன்ற துயரச் சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க அதிகாரிகள் உடனடியாக தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.