உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், மூடப்பட்ட ரயில்வே கேட்டைத் தாண்டி தண்டவாளத்தைக் கடக்க முயன்ற இரண்டு இளைஞர்கள் மீது அதிவேகமாக வந்த ரயில் மோதியதில் அவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் பாங்கி படாவ் ரயில்வே கேட் பகுதி வழியாகப் பயணிகள் மற்றும் வாகனங்கள் செல்வதற்காக கேட் மூடப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் தண்டவாளத்தைக் கடக்கக் கூடாது என்ற எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல், இரண்டு இளைஞர்கள் பாதுகாப்புக் கேட்டைத் தாண்டி தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த வழியாக வந்த அதிவேக ரயில் அவர்கள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில் ரயிலின் சக்கரங்களில் சிக்கி பலத்த காயமடைந்த இரண்டு வாலிபர்களும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து உடல்களைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில் தண்டவாளங்களைக் கடக்கும்போது பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
