“பிக் பாஸ் மேடைக்கு திரும்பிய விஜய் சேதுபதி…” அவர் சொன்ன ஒரு வார்த்தை… கலங்கிய ரசிகர்கள்…!!

By Devi Ramu on ஐப்பசி 31, 2026

Spread the love

உடல்நலக் குறைவு மற்றும் குரலில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாகச் சில காலம் ஓய்வெடுத்த நடிகர் விஜய் சேதுபதி, சற்று உடல்நிலை சரியில்லாத நிலையிலும் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க மீண்டும் உற்சாகமாகத் திரும்பியுள்ளார்.

விஜய் டிவி மற்றும் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியைத் தொடர்ந்து தொகுத்து வழங்கி வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, கடந்த வாரம் உடல்நலக் குறைவு காரணமாக ஓய்வில் இருந்ததால் அவருக்குப் பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். இதற்கிடையில், டிடிஎஃப் வாசனின் வைல்டு கார்டு என்ட்ரியால் சூடுபிடித்துள்ள பிக் பாஸ் வீட்டை மீண்டும் கையில் எடுத்துள்ள விஜய் சேதுபதி, தற்போது வெளியாகியுள்ள புதிய புரோமோவில் உடல்நிலை இன்னும் முழுமையாகச் சரியில்லாத நிலையிலும் தனது அதே அர்ப்பணிப்புடன் தோன்றி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

   

“எப்படி போனேனோ அப்படியே அதே குரலுடன் வந்திருக்கிறேன்” என அவர் கட்டிய குரலில் சிரமப்பட்டுப் பேசும் காட்சியைக் கண்ட ரசிகர்கள், ஓய்வின்றித் தொடர்ந்து உழைத்து வரும் அவரது சின்சியாரிட்டியைப் பாராட்டியும், அவரது உடல்நலம் குறித்து கவலை தெரிவித்தும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.