8 மணி நேர சோதனை… 170 ஆவணங்கள், 13 எலக்ட்ரானிக் சாதனங்கள் சிக்கியது எப்படி?…. கே.என்.நேருவுக்கு எதிராகக் குவியும் ஆதாரங்கள்…. உறைந்துபோன அரசியல் வட்டாரம்…!

By Nanthini on ஐப்பசி 30, 2026

Spread the love

முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்குத் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) நடத்திய தீவிர சோதனையில் 170 முக்கிய ஆவணங்கள் மற்றும் 13 மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நகராட்சி நிர்வாகத்துறையில் பணிகளுக்கு ஆட்களை நியமனம் செய்ததில் சுமார் ரூ.634 கோடி வரை லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டு தொடர்பாக அவருக்குத் தொடர்புடைய 25 இடங்களில் அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டு வழக்கின் முதற்கட்ட ஆதாரங்களைச் சேகரித்துள்ளனர்.

சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாகத் தொடர்ச்சியாக நடைபெற்ற இந்தச் சோதனையின்போது, முறைகேடுகள் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் தொடர்பான ஏராளமான ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட 13 மின்னணு சாதனங்களில் உள்ள தரவுகளைப் பகுப்பாய்வு செய்யும் பணியில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சோதனையும், அதன்பின் கைப்பற்றப்பட்டுள்ள ஆவணங்களும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளன.