உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்நோர் பகுதியில் உள்ள ஒரு மாடல் மதுபானக் கடையில், மது வாங்க வந்த ராஜேஷ் என்பவருக்கும் அங்குள்ள கடை ஊழியருக்கும் இடையே ஏதோ ஒரு பிரச்சனை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ், இதுகுறித்துத் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.
தகவலறிந்த ராஜேஷின் குடும்பத்தினர் பெண்கள் உட்பட உடனடியாக அந்த மாடல் கடைக்கு திரண்டு வந்தனர். அங்கு கடையில் இருந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள், கடையை அடித்து நொறுக்கி பெரும் ரளையில் ஈடுபட்டனர். மேலும், அங்கு வைக்கப்பட்டிருந்த பல விலை உயர்ந்த மதுபானப் புட்டிகளை தூக்கி வீசி உடைத்துச் சேதப்படுத்தினர்.
https://twitter.com/Zuber_Akhtar1/status/2114962784492638630/video/1
இந்தச் சம்பவத்தின் போது அங்கிருந்த பெண்கள் சிலரும் ஊழியர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டினர். இதனால் அப்பகுதியில் கடும் பரபரப்பு நிலவியது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, முதற்கட்டமாக ராஜேஷ் மற்றும் ஒரு பெண்ணை கைது செய்து மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.
