அடச்சீ… நீயெல்லாம் என்ன மனுஷன்?… வரதட்சணை தராததால் மனைவியை… நடுரோட்டில் இழுத்துச் சென்று கொடூரமாகத் தாக்கிய கணவன்… CCTV காட்சிகளால் பரபரப்பு…!

By Swetha on ஐப்பசி 25, 2026

Spread the love

லூதியானாவின் ஜாசியன் கிரீன் என்கிளேவ் பகுதியில், ரிதிஷ் சர்மா என்பவர் தனது மனைவி ட்விங்கிளை வீதியின் நடுவில் கூந்தலைப் பிடித்து இழுத்து, கொடூரமாக உதைத்துத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவம் அங்குள்ள சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகி சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனது மனைவியிடம் இருந்து தார் எஸ்.யூ.வி சொகுசு காரையும், பின்னர் மோட்டார் சைக்கிளையும் வரதட்சணையாகக் கேட்டு ரிதிஷ் வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. மனைவி அதற்குச் சம்மதிக்காததால் ஏற்பட்ட ஆத்திரத்தில், அவர் நடுரோட்டில் வைத்துப் பெண்ணை இரக்கமின்றித் தாக்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

   

பாதிக்கப்பட்ட பெண் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்துப் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வரதட்சணைக் கொடுமையால் நடந்த இந்த வன்முறைச் சம்பவம் அப்பகுதியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.