திக்… திக்… போலீஸ் ஸ்டேஷன் வாசலில்… ஆடையை அவிழ்த்து திருநங்கைகள் வெறித்தனம்… ஃபினாயில் குடித்து தற்கொலை முயற்சி… உ . பி – யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

By Swetha on ஐப்பசி 25, 2026

Spread the love

உத்தரப் பிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்தில், வீடுகளுக்குச் சென்று வாழ்த்து கூறி பணம் வசூலிக்கும் எல்லைப் பகுதியைப் பிரிப்பதில் திருநங்கைகளின் இரு குழுக்களுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இந்தச் சூழலில், தங்கள் புகாரின் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என ஒரு குழுவினர் குற்றம்சாட்டினர். இதன் தொடர்ச்சியாக, நவாபாத் காவல் நிலையம் மற்றும் காவல கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பாகத் திரண்டு அவர்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போரட்டத்தின் போது, சிலர் சாலை மறியலில் ஈடுபட்டதுடன், வாகனங்களின் மீது ஏறியும், ஆடைகளைக் களைந்தும், காவலர்களிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுப் பரபரப்பை ஏற்படுத்தினர். முன்னதாக, காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ஃபினாயிலை ஒருவர் குடித்து தற்கொலை முயற்சி செய்த சம்பவமும் நடந்திருந்தது. நடவடிக்கை எடுக்காமல் தாமதித்த காவல்துறைக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டதால், அப்பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

   

https://twitter.com/TheHarpreetTake/status/2114271081498546416/video/1

   

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த நவாபாத் காவல்துறையினர், பொது அமைதிக்குக் பங்கம் விளைவித்தல் மற்றும் அரசுப் பணிகளைச் செய்ய விடாமல் தடுத்தல் போன்ற சரத்துகளின் கீழ் நடவடிக்கை எடுத்தனர். இதில் தொடர்புடைய 5 பேரைக் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜான்சியில் பதாய் வசூல் தொடர்பாகத் திருநங்கைகளிடையே இது போன்ற மோதல்களும் போராட்டங்களும் முன்னரும் நிகழ்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.