திமுகவின் முன்னணி நிர்வகியும் , தூத்துக்குடி மாவட்டச் செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் தவெகவில் இணையத் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. திமுகவில் மாவட்டச் செயலாளர்களுக்கு எழுபது வயது உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டதன் காரணமாக, தனது பதவியை இழக்க நேரிடும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளதே இந்த அதிருப்திக்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது. இதன் முதற்கட்ட முன்னோட்டமாகவே அவரது முக்கிய ஆதரவாளரான பில்லா ஜெகன் சமீபத்தில் தவெகவில் இணைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. முன்பு முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்து வந்த அனிதா ராதாகிருஷ்ணன், தற்போதைய சூழலில் மௌனம் காத்து வருவதும் இந்த யூகங்களுக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைகிறது.
இந்த அரசியல் நகர்வுகள் உண்மையாகும்பட்சத்தில், அது தென் மாவட்ட திமுக அரசியலில் ஒரு முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இது குறித்து அனிதா ராதாகிருஷ்ணனோ அல்லது திமுக தலைமை தரப்போ அதிகாரப்பூர்வமாக எந்தவிதக் கருத்துக்களையும் இதுவரை வெளியிடவில்லை. எதிர்கால அரசியல் கணக்குகளின் அடிப்படையில் அவர் மாற்றுக்கட்சியை நோக்கி நகர்வாரா அல்லது திமுகவிலேயே தொடர்வாரா என்பது குறித்த தெளிவு வரவிருக்கும் நாட்களில் தெரியவரும்.
