ஷாக் நியூஸ்…. ஜனவரி 1 முதல் இந்த போனில் வாட்ஸ்அப், டெலிகிராம் வேலை செய்யாது?…. மத்திய அரசின் அதிரடி உத்தரவு….!

By Nanthini on ஐப்பசி 23, 2026

Spread the love

இணையப் பயன்பாடு பெருகியதிலிருந்து வாட்ஸ்அப், டெலிகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களின் பயன்பாடும் மக்களிடையே பலமடங்கு அதிகரித்துள்ளது. பலரும் செல்போனில் சிம் கார்டு இல்லாமலோ அல்லது நெட்வொர்க் இல்லாமலோ, வைஃபை இணைப்பை மட்டும் பயன்படுத்தி மேற்கண்ட செயலிகளைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர். குறிப்பாக, சிம் கார்டை அகற்றிவிட்டு வைஃபை மூலம் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற ஆப்களை ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் இயக்கும் வழக்கம் பொதுமக்களிடையே பரவலாக இருந்தது.

இந்நிலையில்தான், இதுபோன்ற பயன்பாடுகளுக்குத் தடைவிதிக்கும் வகையில் மத்திய தொலைத்தொடர்புத்துறை புதிய கட்டுப்பாட்டைக் கொண்டுவந்துள்ளது. அதன்படி, வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் செல்போன்களில் சிம் கார்டுகளை முழுமையாக அகற்றினால் டெலிகிராம், வாட்ஸ்அப் போன்ற செயலிகள் இயங்காது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. சைபர் குற்றங்களைத் தடுத்தல் மற்றும் பாதுகாப்பை பலப்படுத்துதல் போன்ற காரணங்களுக்காக இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

   

இந்த புதிய கட்டுப்பாட்டின் மூலம் இனிமேல் செல்லுபடியாகும் சிம் கார்டு இல்லாமல் வைஃபை இணைப்பை மட்டும் நம்பி சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த முடியாது. இந்த அதிரடி மாற்றத்தால், சிம் கார்டு இல்லாத சாதனங்களைப் பயன்படுத்தி வந்த பயனர்கள் இனி தங்களது போன்களில் கட்டாயம் சிம் கார்டைப் பராமரிக்க வேண்டியது கட்டாயமாகிறது.