அமைச்சர்களுக்கே அனுமதி இல்லையா…? நந்தித் தியூஜா பூஜையின் போது  கெடுபிடி காட்டிய போலீஸ் அதிகாரிகள்… முதல்வர் கடும் கண்டனம்… வைரலாகும் வீடியோ…!!

By Devi Ramu on ஐப்பசி 22, 2026

Spread the love

கர்நாடக மாநிலம் மைசூரு அரண்மனை வளாகத்தில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற நந்தித் தியூஜா பூஜையில் கலந்துகொள்ள வந்த அமைச்சர்கள் பாலகிருஷ்ணா, நரேந்திரசுவாமி மற்றும் பசவந்த் அப்பா ஆகியோரை அரண்மனை நுழைவுவாயிலில் காவல்துறையினர் தடுத்து நிறுத்திய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர்களையே உள்ளே செல்லவிடாமல் தடுத்தது அதிகாரிகளின் ஆணவமான செயல் எனவும், இதுபோன்ற பொறுப்பற்ற தன்மையைச் சகித்துக்கொள்ள முடியாது எனவும் முதல்வர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து உடனடியாகத் தலையிட்டு அமைச்சர்களின் உள்ளே செல்ல வழிவகை செய்த போதிலும், இச்சம்பவத்திற்குக் காரணமானவர்கள் யார் என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு தலைமைச் செயலாளர் டாக்டர் ஷாலினி ராஜீனிடம் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். விசாரணைக்குப் பிறகு பொறுப்பான அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.