சீனாவின் ஹுனான் மாகாணத்தைச் சேர்ந்த 27 வயது சமூக வலைதள இன்ஃப்ளூயன்சர், கடந்த 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் கட்டிடத்தின் 35ஆவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். கடுமையான காயங்களுடன் மத்திய தெற்கு பல்கலைக்கழகத்தின் மூன்றாவது சியாங்யா மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவர், தொடர் மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு தற்போது பூரண குணமடைந்துள்ளார்.
விபத்தில் சிக்கி சுமார் 17 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் சமூக வலைதளப் பக்கத்திற்குத் திரும்பியுள்ள அவர், தனது போராட்ட வாழ்க்கை மற்றும் உயிர் பிழைத்த கதையைப் பகிர்ந்துள்ளார். “எனது வாழ்க்கை இனி எனக்கு மட்டும் சொந்தமானதல்ல, என்னை மீட்ட மருத்துவர்கள் மற்றும் உதவிய அனைவருக்கும் உரியது” என அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ள இந்தச் செய்தி இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
