ஹரியானாவின் ஃபரிதாபாத் பகுதியில் குரங்கு ஒன்று பிடிக்கப்பட்டு, தாக்கி, தெருக்களில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்களையும் விலங்கு நல ஆர்வலர்களையும் கடும் அதிர்ச்சிக்கும் கோபத்திற்கும் உள்ளாக்கியுள்ளது.
மனிதர்களுக்கும் குரங்குகளுக்கும் இடையிலான மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு மோதல்களைச் சட்டப்பூர்வமாகவும் மனிதாபிமான முறையிலும் மட்டுமே கையாள வேண்டும் என்று விலங்கு நல ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
விலங்குகளைத் தாக்குவது மற்றும் அவற்றுக்குத் தேவையற்ற வலியை ஏற்படுத்துவது ‘மிருகவதை தடுப்புச் சட்டம், 1960’-ன் கீழ் குற்றமாகும் என்பதால், இந்தச் சம்பவத்தில் சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இணையவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
