போலீஸ் பார்த்த வேலையா இது…? மகனை தேடிய தாய்… அதிகாரிகளின் பதிலால் நிலைகுலைந்த குடும்பம்… கொந்தளிக்கும் நெட்டிசன்கள்…!!

By Devi Ramu on ஐப்பசி 22, 2026

Spread the love

மெக்சிகோவில் தாய் தன் மகனுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோதே, ரோந்து வாகனத்தில் வந்த காவல்துறை அதிகாரி ஒருவர் எந்தவித முன்னறிவிப்புமின்றி அந்த இளைஞரை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்ற சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலை முடிந்து வீட்டிற்கு அருகில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது தாயிடம் கடையில் என்ன வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தபோதே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. மகன் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த தாய், சிசிடிவி கேமராக்களைச் சோதித்தபோது காவல்துறையினரே அவரைத் தாக்கி அழைத்துச் சென்றது தெரியவந்துள்ளது.

   

ஆனால், அதிகாரிகளோ உரிய தகவல்களை வழங்க மறுத்ததுடன், “அவன் எதையாவது செய்திருப்பான், பிள்ளையை ஒழுங்காக வளர்த்திருக்க வேண்டும்” என்று குடும்பத்தினரைக் குறை கூறியுள்ளனர். பாதுகாப்பிற்காக இருக்க வேண்டியவர்களே இதுபோன்று சட்டவிரோதக் கைதுகளில் ஈடுபடுவது பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.