பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மீதான துப்பாக்கிச் சூடு தாக்குதல் வழக்கில், உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த பபிதா (22) மற்றும் ராதா (23) ஆகிய இரண்டு இளம் பெண்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் பஹல்கர்க் பகுதியில் வாடகைக்கு வசித்து வந்த இவர்கள், ரயிலில் மும்பை சென்று துப்பாக்கியை ஷூட்டர்களிடம் டெலிவரி செய்துள்ளதாகவும், அதற்காக அவர்களுக்கு வெறும் 10 முதல் 12 ஆயிரம் ரூபாய் மட்டுமே கூலியாக வழங்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் இதுவரை ஹிரித்திக், ரேஹான், பூல் சிங், குணால், சுமித், பபிதா, ராதா உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே, வடமாநிலங்களில் நிலவும் கடுமையான வேலையின்மை மற்றும் வறுமையே இதுபோன்ற குற்றச்செயல்களில் இளைஞர்களைத் தள்ளுவதாகச் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் தீவிர விவாதங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
