“கொஞ்ச ஆட்டமா ஆடுனீங்க…?” காதுகளை பிடித்து கொண்டு போலீசாரிடம் மன்னிப்பு கேட்ட வாலிபர்கள்…. வைரலாகும் பகீர் வீடியோ…!!

By Devi Ramu on ஐப்பசி 19, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி பகுதியில், நகரும் காரின் வெளியே தொங்கிக்கொண்டு ஆபத்தான சாகசங்களில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்களைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். நவாபாத் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் காரின் கதவுகளில் தொங்கிக்கொண்டு இரண்டு வாலிபர்கள் ஆபத்தான முறையில் ஸ்டண்ட் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதனைக் கவனித்த காவல்துறையினர் உடனடியாக விசாரணை நடத்தி, வாகனத்தைக் கைப்பற்றியதுடன் அன்ஷ் பிரஜாபதி மற்றும் ஷிவம் அஹிர்வார் ஆகிய இருவரைக் கைது செய்தனர். காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டபோது அந்த வாலிபர்கள் காதுகளைப் பிடித்துக் கொண்டு மன்னிப்புக்கேட்கும் காட்சிகள் தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தையும் வைரலையும் ஏற்படுத்தியுள்ளன.