5 பேர் பலியான வழக்கில் திடீர் திருப்பம்…! சிக்கிய ஆடியோ ஆதாரம்…. “அக்காவும், தங்கச்சியும் தான் காரணம்…” பகீர் பின்னணி…!!

By Devi Ramu on ஐப்பசி 19, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா ரபுபுரா அருகே உள்ள நாக்லா பதாம் கிராமத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் அவர்களின் 3 குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் 3 உறவினர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மகேஷ் (37), அவரது மனைவி லலிதா (35) மற்றும் குழந்தைகள் மிஷ்டி (7), சாக்ஷத் (11), ரியாஞ்ச் (3) ஆகியோர் சனிக்கிழமை காலை தங்களது வீட்டில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டனர்.

தொடக்கத்தில் குடும்பத்தினர் நூடுல்ஸ் சாப்பிட்டதால் உணவு நச்சுத்தன்மை ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனையில் விஷம் அருந்தியதற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன. இறப்பதற்கு முன் மகேஷ் தனது செல்போனில் பதிவு செய்த ஒலிப்பதிவில் தனது அக்கா சுனிதா, தங்கை சப்னா மற்றும் மைத்துனர் சந்திரசேகர் ஆகியோரே தங்களது மரணத்திற்கு காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார். மகேஷ் வசித்து வந்த வீட்டை சுனிதா தனது பெயருக்கு மாற்றியதால் ஏற்பட்ட சொத்து தகராறு மற்றும் மன உளைச்சல் காரணமாகவே இந்த விபரீத முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மூன்று பேரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.