“அது என்னோட நகை…” திருடப்பட்ட நகையை வைத்து நகைக்கடன் பெற்ற மர்ம நபர்… சிக்கலில் தவிக்கும் உரிமையாளர்… நிதி நிறுவனத்தில் வெடித்த மோதல்….!!

By Devi Ramu on ஐப்பசி 19, 2026

Spread the love

வீட்டில் திருடப்பட்ட தங்களின் தங்க வளையங்கள் பல மாதங்களுக்குப் பிறகு தனியார் நிதி நிறுவனத்தில் நகைக்கடனாக வைக்கப்பட்டுள்ளது தெரியவந்ததை அடுத்து, உரிமையாளருக்கும் நிறுவனத்திற்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட நபர் ஒருவரின் வீட்டில் இரண்டு தங்க வளையங்கள் திருடுபோயுள்ளன. பல மாதங்களாகத் தேடியும் எந்தத் துப்பும் கிடைக்காத நிலையில், திருடப்பட்ட அந்த நகைகளைக் கொண்டு ‘பஜாஜ் பைனான்ஸ்’ நிறுவனத்தில் நகைக்கடன் பெறப்பட்டுள்ளது சுமார் 8-10 மாதங்களுக்குப் பிறகு தெரியவந்துள்ளது.உடனடியாக உரிய ஆவணங்களுடன் நிதி நிறுவனத்திற்குச் சென்ற உரிமையாளர், அது தனது திருடப்பட்ட நகை எனத் தெரிவித்தார்.

   

ஆனால், உரிய சரிபார்ப்பு இல்லாமல் கடன் வழங்கிய நிறுவனமோ, தாங்கள் கொடுத்த பணத்தைத் திருப்பித் தந்தால் மட்டுமே நகையைத் தரமுடியும் எனக் கூறியுள்ளது. கடன் தொகையை மீட்க நிறுவனம் நகையை விற்கத் தயாராகி வரும் நிலையில், திருடப்பட்ட நகையை மீட்டெடுப்பதில் ஏற்பட்டுள்ள இந்தச் சிக்கல் இணையத்தில் நெட்டிசன்களிடையே பல்வேறு கேள்விகளையும் விவாதங்களையும் எழுப்பியுள்ளது.