“ஷாப்பிங் பண்ண போறோம்…” கடைக்குள் நுழைந்து கைவரிசை காட்டிய பெண்கள்…. சிசிடிவியில் சிக்கிய ஆதாரம்…. பகீர் சம்பவம்…!!

By Devi Ramu on ஐப்பசி 19, 2026

Spread the love

மகாராஷ்டிரா மாநிலம் புனே பெர்குசன் கல்லூரி சாலையில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில், பெண்கள் குழுவினர் துணிகளைத் திருடும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடையில் வாடிக்கையாளர்கள் போல வலம்வந்த சில இளம் பெண்கள், விற்பனையாளர்களின் கவனத்தை திசைதிருப்பிக் கடையில் இருந்த ஆடைகளைத் தாங்கள் கொண்டுவந்த பைகளில் திருடி வைத்துக் கொள்ளும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன.

இந்த சிசிடிவி பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி விவாதாமாக மாறியுள்ள போதிலும், இச்சம்பவம் தொடர்பாக இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வமான போலீஸ் புகாரும் பதிவு செய்யப்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.