ஸ்ரத்தா துபே உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த சமூக வலைதள இன்ஃப்ளூயன்சர், ஒப்பனைக் கலைஞர் மற்றும் மாடல் ஆவார். இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான ஃபாலோவர்களை கொண்டுள்ள இவர், ஃபேஷன் மற்றும் மாடலிங் துறையில் தீவிரமாக இயங்கி வருகிறார்.
லக்னோவைச் சேர்ந்த சிவம் சர்மா (28) என்ற உணவு விடுதி உரிமையாளரும், இவரும் காதலித்து லிவ்-இன் உறவில் வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவம் சர்மா அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து பேசிய சிவத்தின் தாய், ஸ்ரத்தா துபே மற்றும் அவரது குடும்பத்தினர் தன் மகனைத் தொடர்ந்து துன்புறுத்தி, உடல் ரீதியாகத் தாக்கி, மிரட்டி வந்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் ஸ்ரத்தா துபே, அவரது சகோதரி மற்றும் ஓட்டுநர் மீது காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
