“ஓடிப்போன மனைவி… சங்கிலியை உடைத்து மீண்டும் காதலனுடன் ஓட்டம்”…. கடுப்பான கணவர் செய்த அந்த காரியம்…. குஜராத்தை உலுக்கிய பகீர் சம்பவம்…..!

By Nanthini on ஐப்பசி 7, 2026

Spread the love

குஜராத் மாநிலம் வாபி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தன் கணவரை விட்டுப் பிரிந்து சொடிலா பகுதியில் ஒரு நபருடன் கடந்த 3 மாதங்களாக வாழ்ந்து வந்துள்ளார். மனைவியைக் காணாமல் தேடி அலைந்த கணவர், அவர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்து வந்தார். மீண்டும் அவர் ஓடிவிடக் கூடாது என்பதற்காக இரும்புச் சங்கிலியால் கட்டிப் போட்டுள்ளார். இருப்பினும், அந்தச் சங்கிலியை உடைத்துக் கொண்டு அந்தப் பெண் மீண்டும் தன் காதலனிடமே சென்றுள்ளார்.

இதனால் கடுப்பான கணவர், தன் உறவினர்களுடன் சென்று இருவரையும் தேடிப்பிடித்து சுரேந்திரநகருக்கு அழைத்து வந்துள்ளார். அங்கு பொதுமக்கள் முன்னிலையில் காதலனை மரத்தில் கட்டிவைத்துத் தாக்கிய கணவர், “திருமணத்தைத் தாண்டிய உறவில் ஈடுபட்டதால் சுத்திகரிப்பு சடங்கு செய்ய வேண்டும்” என்று கூறி, மனைவியை அனைவரது முன்னிலையிலும் பாலியல் ரீதியாகக் கொடுமைப்படுத்தியுள்ளார். மேலும், காதலனைப் பெண்ணின் சிறுநீரைக் குடிக்க வைக்கும் கொடூரத்திலும் ஈடுபட்டுள்ளார்.

   

இந்தச் சகித்துக்கொள்ள முடியாத அக்கிரமங்களை எல்லாம் தனது செல்லிடப்பேசியில் வீடியோவாகப் பதிவு செய்த கணவர், மற்றவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதாகக் கூறி அதை சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தகவலறிந்த காவல்துறை சுரேந்திரநகர் பகுதியில் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி, அழுதுகொண்டிருந்த அந்தப் பெண்ணைப் பத்திரமாக மீட்டு வாக்குமூலத்தைப் பதிவு செய்தது.

   

இச்சம்பவம் தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, தாக்குதல், சட்டவிரோதமாக அடைத்து வைத்தல் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பெண்ணின் கணவர் மற்றும் அவருக்கு உதவிய 2 பெண்கள் உட்பட 9 பேரைக் கைது செய்துள்ளனர். நவீன தொழில்நுட்பமும் ஏஐ காலமும் வளர்ந்துவிட்ட போதிலும், கிராமப்புறங்களில் இன்னமும் இதுபோன்ற மூடநம்பிக்கைகளும் பிற்போக்குச் சிந்தனைகளும் மலிந்திருப்பது சமூக ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.