உத்தரப் பிரதேச மாநிலம் லலித்பூர் மாவட்டத்தில் உள்ள சுனௌரி கேடா கிராமத்தைச் சேர்ந்த 37 வயது பெண், நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த போது, அவரது கணவர் அரிவாளால் வெட்டி கொடூரமாகக் கொலை செய்துள்ளார். குடும்பத் தகராறு காரணமாக இந்தத் தாக்குதல் நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக தால்பேஹட் காவல் நிலையப் போலிஸார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய கணவனைக் கைது செய்தனர். மேலும் உயிரிழந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
