சென்னை ஆபரணத் தங்கச் சந்தையில் இன்று தங்கம் விலை சற்று சரிவைக் கண்டுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.13,660-க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.1,09,280-க்கும் விற்பனையாகிறது.
அதேநேரம் வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமின்றி கிராம் ரூ.245-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ரூ.2,45,000-க்கும் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேசச் சந்தையில் தங்கம் விலையில் பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவுமின்றி மந்தநிலை நீடித்து வருவதன் காரணமாகவே, உள்நாட்டுச் சந்தையிலும் தங்கம் விலை சற்று சரிவைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
