“சொன்னா கேட்க மாட்டியா…?” வியட்நாமில் கனடா யூடியூபருக்கு பளார் விட்ட இந்தியர்… ! இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ….!!

By Devi Ramu on ஐப்பசி 6, 2026

Spread the love

வியட்நாம் நாட்டின் சாய்கோன் பகுதியில் உள்ள ‘7-Eleven’ கடையில், ஜான் லை என்ற கனடாவைச் சேர்ந்த பிரபல லைவ்ஸ்ட்ரீமர் அங்கிருந்த இரு இந்தியர்களைத் அவர்களின் விருப்பத்திற்கு மாறாகத் தொடர்ந்து நேரலையில் படம்பிடித்துள்ளார்.

அந்த இந்தியர்கள் பலமுறை கேமராவை அணைக்குமாறு கேட்டுக்கொண்ட போதிலும், அந்த ஸ்ட்ரீமர் அதைச் செய்ய மறுத்து “இது புதுடெல்லி அல்ல” என்றும், இனவெறித் தூண்டல் கருத்துகளையும் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இந்தியர்களில் ஒருவர், “நீங்கள் வெறுப்பைப் பரப்பி பணம் சம்பாதிக்கிறீர்கள்” என்று கூறி, அந்த ஸ்ட்ரீமரைத் தாக்கினார்.

   

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொது இடங்களில் பிறர் அனுமதியின்றி நேரலை செய்வது மற்றும் தனிநபர் சுதந்திரம் குறித்த காரசாரமான விவாதங்களை இது நெட்டிசன்களிடையே ஏற்படுத்தியுள்ளது.