“அண்ணே… முதல்லயே சொல்லியிருக்க கூடாதா…?” ரூ.39,000 அகமதாபாத் டிக்கெட் வீணா….? தில்ஜித் தோசாஞ்ச் இசை நிகழ்ச்சியால் புலம்பும் தீவிர ரசிகர்…!!

By Devi Ramu on ஐப்பசி 6, 2026

Spread the love

பிரபல பஞ்சாபி பாடகரும் நடிகருமான தில்ஜித் தோசாஞ்ச் , தனது ‘ஆரா வேர்ல்ட் டூர் இசை நிகழ்ச்சியின் இந்தியப் பயணத்தை அறிவித்துள்ளார். முன்னதாக அகமதாபாத் நகரத்தில் மட்டுமே இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதனைப் பார்க்க சிவமிலக்கி என்ற தீவிர ரசிகர் அகமதாபாத் நிகழ்ச்சிக்கு ரூ. 22,000 மற்றும் மற்றொரு டிக்கெட்டுக்கு ரூ. 17,000 என மொத்தம் ரூ. 39,000 செலவிட்டு டிக்கெட்டுகளை வாங்கியுள்ளார்.

ஆனால், அதற்கு அடுத்த நாளிலேயே டெல்லி-என்.சி.ஆர், இந்தூர், அகமதாபாத், மும்பை, பெங்களூரு, லக்னோ மற்றும் சண்டிகர் ஆகிய 7 இந்திய நகரங்களில் தில்ஜித் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த ரசிகர், “அண்ணனே இதை முதலிலேயே சொல்லியிருந்தால் எனது பணமும் நேரமும் மிச்சமாகியிருக்கும்” எனத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆதங்கத்தைப் பதிவிட்டுள்ளார்.

   

இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்களில் சிலர், “அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் மத்தியில் நடக்கும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியின் அனுபவமே தனித்துவமானது, கவலைப்படாதீர்கள்” என்றும், மற்ற சிலர் “அவரே இன்ஸ்டாகிராம் லைவில் பல இடங்களில் நிகழ்ச்சி நடக்கும் என்று கூறியிருந்தாரே, சரியாகத் தேடாமல் அவசரப்பட்டு விட்டீர்கள்” என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.