தாராபுரத்தில் வெளியான அதிரடி கருத்துக்கணிப்பு….. 33.8% வாக்குகள் யாருக்கு?….. அதிர்ச்சியில் திமுக, அதிமுக…. கடைசி நேரத்தில் அதிரடி திருப்பம்….!

By Nanthini on ஐப்பசி 4, 2026

Spread the love

இடைகால இடைத்தேர்தல் களம் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளில் சூடுபிடித்துள்ள நிலையில், வரும் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம், திமுக, அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகிய பிரதான கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தாராபுரத்தில் ஏற்கனவே பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய தவெக தலைவர் விஜய், இன்று தொகுதிக்குட்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் நேரடியாக ரோட் ஷோ சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த இரண்டு தொகுதிகளையும் கைப்பற்றிய அதிமுக, தன் வசமிருக்கும் தொகுதிகளை மீண்டும் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. மறுபுறம், இந்த இரண்டு தொகுதிகளிலும் தவெகவை வீழ்த்தி ஆட்சிக்கான செல்வாக்கை நிரூபிக்க திமுகவும் முழுவீச்சில் களப்பணியாற்றி வருகிறது. இதனால் இரு தொகுதிகளிலும் நான்கு முனைப் போட்டி உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

   

இந்நிலையில், ‘Constituency Insight’ நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் தாராபுரம் தொகுதியின் தேர்தல் முடிவுகள் குறித்த முக்கிய பார்வையை வெளிப்படுத்தியுள்ளன. இக்கருத்துக்கணிப்பின்படி, தாராபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் 33.8% வாக்குகளைப் பெற்று வெற்றிபெறும் என்றும், அதிமுக 31.6% வாக்குகளுடன் இரண்டாமிடத்தையும், திமுக 28.4% வாக்குகளுடன் மூன்றாமிடத்தையும் பிடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாம் தமிழர் கட்சி 1% வாக்குகளை மட்டுமே பெறும் என அந்த கருத்துக்கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.