பதவிகளை குறைத்து, பணத்தை மிச்சைப்படுத்த விஜய் அரசு முடிவு…. அதிகாரிகளின் பதவிகளுக்கு செக் வைக்கும் புதிய திட்டம்…. யாருக்கெல்லாம் வேலை காலி…?

By Nanthini on ஐப்பசி 4, 2026

Spread the love

தமிழ்நாடு அரசு தனது நிதிச் சுமையைக் குறைக்கவும், புதிய நலத்திட்டங்களைச் செயல்படுத்த வருவாயைப் பெருக்கவும் பல்வேறு துறை சார்ந்த சீரமைப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகிறது. நடப்பு நிதியாண்டில் மாநில அரசின் கடன் சுமை ரூ.10 லட்சம் கோடியைத் தாண்டியுள்ள நிலையில், மொத்த செலவினம் ரூ.4.05 லட்சம் கோடியாக இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் அரசு ஊழியர்களின் சம்பளத்திற்காக மட்டும் ஆண்டிற்கு ரூ.77,310 கோடி செலவிடப்படுவதால், அநாவசியச் செலவுகளைக் கட்டுப்படுத்த நிர்வாக ரீதியிலான மாற்றங்கள் அவசியமாகின்றன.

தமிழகத்தின் முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பொறுப்பேற்ற பிறகு, தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம், வெற்றிப் பயணத் திட்டம், காலை உணவுத் திட்ட விரிவாக்கம் மற்றும் 200 யூனிட் இலவச மின்சாரம் போன்ற முக்கிய வாக்குறுதிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றுக்கான நிதித் தேவையை பூர்த்தி செய்ய, மதிப்பீட்டை விட அதிகமாகத் திட்டமிடப்பட்ட பல பெரிய டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், டாஸ்மாக் மற்றும் கனிம விற்பனையில் நடக்கும் முறைகேடுகளைத் தடுப்பதுடன், பத்திரப்பதிவு உள்ளிட்ட அரசுச் சேவைகளை முழுமையாக ஆன்லைன் மயமாக்கி சேவைக்கட்டண வருவாயை உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

   

நிதி நிர்வாகத்தை வலுப்படுத்தும் அடுத்த கட்டமாக, அரசுத் துறைகளில் தேவையற்ற பணியிடங்களைக் குறைக்கும் சீரமைப்புப் பணிகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, வணிகவரித்துறை போன்ற முக்கியத் துறைகளில் அதிக எண்ணிக்கையில் உள்ள கூடுதல் ஆணையர்கள் மற்றும் இணை ஆணையர்கள் போன்ற உயர்பதவிகளைக் குறைப்பது குறித்தும், அவசியமில்லாத பணியிடங்களைக் கண்டறிவது குறித்தும் தலைமைச் செயலக வட்டாரங்கள் ஆய்வு செய்து வருகின்றன.

   

அரசுத் துறைகளில் இத்தகைய பணியிடக் குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், தற்போது பணியில் இருக்கும் ஊழியர்கள் எவருடைய வேலைக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. ஆட்குறைப்பு இல்லாமல், தேவையற்ற பணியிடங்களை மட்டும் ரத்து செய்வதன் மூலம் அரசின் கூடுதல் செலவினங்களைக் கணிசமாகக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.