மதுராந்தகம் இடைத்தேர்தல் களம் தேர்தல் பிரசார சூடால் தகித்து வரும் நிலையில், திமு கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தரப்பிற்கு இடையே கடுமையான சொல்லம்புகள் வீசப்பட்டு வருகின்றன. மதுராந்தகத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஸ்டாலின், “இந்த இடைத்தேர்தல் மக்கள் மீது தேவையில்லாமல் திணிக்கப்பட்ட ஒன்று. முதல்வர் விஜய் குறுக்கு வழியில் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கிய அப்பட்டமான குதிரை பேரத்தின் காரணமாகவே இத்தேர்தல் நடைபெறுகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமு கழகம் செய்த ஒரே தவறு தவெகவைக் கண்டு கொள்ளாமல் விட்டதுதான். நாங்கள் எங்களின் கொள்கை எதிரியோடு மட்டுமே மோதினோம்; இந்த கோமாளி கூட்டத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டோம்” என்று கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
ஸ்டாலினின் இந்த விமர்சனத்திற்கு தவெக தரப்பிலிருந்து உடனடியாகவும் நயம்படவும் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “தோல்வி தலைவர் ஸ்டாலின் அவர்களே, எங்களைக் கோமாளி கூட்டம் என்று சொல்லும் உங்களுக்கு ஒரு பிரபல சினிமா வசனத்தை நினைவூட்ட விரும்புகிறேன்: ‘அந்த கரடி பொம்மை என்ன விலை? சார், அது கண்ணாடி சார்!’” என்று நக்கலாகக் கூறித் தாக்குதல் நடத்தினார். திமுக தலைவரின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்குத் தவெக அமைச்சர் அளித்த இந்தத் தேர்தல் கால பகடிப் பதிலடி, தமிழக அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
