“அப்பாவை மாட்டி கொடுக்க போன் போட்ட பொண்ணு… ஆனா கடைசியில…” போலீஸ் வந்ததும் தலைகீழாக மாறிய கதை… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

By Devi Ramu on ஐப்பசி 4, 2026

Spread the love

சமூக வலைதளத்தில் பரவி வரும் சம்பவம் ஒன்று நெட்டிசன்களிடையே வேடிக்கையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. குடித்துவிட்டுத் தகராறு செய்த தன் தந்தையின் தொல்லை தாங்க முடியாமல், கோபமடைந்த மகள் அவசர உதவி எண்ணான 112-க்கு அழைத்து உடனடியாகக் காவல்துறையை வரவழைத்துள்ளார். ஆனால், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிஸார் அப்பாவைக் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றபோது நிலைமையே தலைகீழாக மாறியது.

கோபம் தணிந்த மகளுக்குத் தந்தையின் மீதான பாசம் மீண்டும் மேலெழவே, அப்பாவைக் கொண்டு செல்ல விடாமல் போலிஸாருடன் சண்டையிட்டு அவர்களைத் தடுத்து நிறுத்தியுள்ளார். “ஒரே நொடியில் நிலைமையையே மாற்றிவிட்டார்,” என்று நெட்டிசன்கள் பலரும் இந்தக் கூத்தையும் போலிஸாரின் நிலையையும் பார்த்து வேடிக்கையாகக் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.