“மகளின் லொக்கேஷனை பார்க்காதே… மகனின் எண்ணத்தை செக் பண்ணு…” 17 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை… டெல்லி பல்கலைக்கழக மாணவிகளின் அதிரடி முழக்கம்…!!!

By Devi Ramu on புரட்டாதி 30, 2026

Spread the love

டெல்லியின் கல்காஜி ஆஸ்தா குஞ்ச் பூங்கா அருகே 17 வயது சிறுமி ஒருவர் கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, டெல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவிகள் வீதிக்கு இறங்கிப் பிரம்மாண்ட போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

மிராண்டா ஹவுஸ், லேடி ஸ்ரீராம், கார்கி மற்றும் கமலா நேரு உள்ளிட்ட முன்னணி கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகள் மற்றும் பாலினச் சமத்துவ ஆர்வலர்கள் டெல்லி தெருக்களில் திரண்டு விழிப்புணர்வுப் பேரணி நடத்தினர். “நாங்கள் சுதந்திரமான பெண்கள்”, “காரியக்காரர்களை சிறைக்குள் தள்ளுங்கள், பெண்களின் சுதந்திரத்தை முடக்காதீர்கள்”, “மகளின் இருப்பிடத்தைக் கண்காணிப்பதை விட்டுவிட்டு, மகனின் எண்ணத்தைச் செக் பண்ணுங்கள்” போன்ற அதிரடி முழக்கங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

   

“எங்கள் பாவாடை குட்டையானது அல்ல, உங்களின் மனப்பான்மையே குறுகியது”, “நாங்கள் வெறும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்வதற்காக இந்த கொட்டும் மழையில் தெருவுக்கு வரவில்லை” என மாணவிகள் ஆவேசமாக முழக்கமிட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளையும் ஆதரவையும் பெற்று வருகின்றன.