ரூ.200 கூலிக்கு விபரீத வேலை… 15 வயது பள்ளிச் சிறுவனை வைத்து செய்த பகீர் காரியம்… மும்பை பெண்ணின் கொடூர வலை… அதிர வைக்கும் பின்னணி…!!

By Gayathri on புரட்டாதி 28, 2026

Spread the love

மும்பையில் தற்போது பள்ளிக்குச் செல்லும் வயதில் உள்ள சிறுவர்களை போதைப்பொருள் விற்கும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுத்தும் கொடூரமான சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் கோவண்டி பகுதியில் இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், சந்தேகத்திற்கிடமான வகையில் தப்பியோட முயன்ற 15 வயது சிறுவனை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவனது உறவினர் முன்னிலையில் வைத்து அவனது பையைச் சோதனையிட்ட போது, அதில் விற்பனைக்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் அதிகமான போதை மாத்திரைகள் பிடிபட்டன.

பிடிபட்ட சிறுவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அருகிலுள்ள குடிசைப் பகுதியைச் சேர்ந்த பானோ காலா என்ற பெண்மணி தனக்கு வெறும் 200 ரூபாய் கூலி கொடுத்து இந்த மாத்திரைகளை வாடிக்கையாளர்களுக்கு விற்கச் சொன்னதாக வாக்குமூலம் அளித்தான். இந்த அதிர்ச்சியூட்டும் தகவலின் அடிப்படையில், சிறுவனை குற்றச்செயலில் ஈடுபடுத்திய அந்தப் பெண்ணை போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் உடனடியாக கைது செய்தனர். மேலும், மீட்கப்பட்ட சிறுவனை நல்வழிப்படுத்துவதற்காகச் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.