“அவனுடன் தான் வாழ்வேன்…” உயிருடன் இருக்கும் மகளுக்கு இறுதி ஊர்வலம் நடத்தி மயானத்தில் எரியூட்டிய பெற்றோர்… மனதை ரணமாக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

By Devi Ramu on புரட்டாதி 28, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில், உயிருடன் இருக்கும் சொந்த மகளுக்குப் பெற்றோரும் உறவினர்களும் சேர்ந்து இறுதி ஊர்வலம் நடத்தி, மயானத்தில் வைத்துச் அடக்கம் செய்யும் சடங்குகளைச் செய்த அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உருவாக்கியுள்ளது.

அந்தப் பெண், மாற்றுச் சாதியைச் சேர்ந்த வேறு ஒரு பெண்ணைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சாதி மறுப்பு மற்றும் பால்புதுமையினக் காதலைக் குடும்பத்தினர் கடுமையாக எதிர்த்த நிலையில், அந்தப் பெண் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பின்னர்க் குடும்பத்தினர் அவரைத் தொடர்பு கொண்டு பேசியபோதிலும், அவர் தனது காதலியுடன்தான் வாழ்வேன் என்பதில் தீவிரமாக உறுதியாகவும் பிடிவாதமாகவும் இருந்துள்ளார்.

   

மகளின் இந்த முடிவால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் குடும்பத்தினர், தங்கள் குடும்பத்தின் மானம் போய்விட்டதாகக் கூறி, உயிருடன் இருக்கும் மகளுக்கு பாடை கட்டி, இறுதி ஊர்வலம் எடுத்துச் சென்று மயானத்தில் வைத்துச் அடக்கம் செய்யும் சடங்குகளைச் செய்து முடித்துள்ளனர்.

   

இச்சம்பவம் தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பிரதாப்கர் காவல் துறையினர் இது குறித்து விளக்கம் அளித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக ஜெத்வாரா காவல் நிலையத்தில் கடத்தல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், காணாமல் போன பெண்ணைப் போலிஸார் பத்திரமாக மீட்டு, அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்து மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளதாகவும் போலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.