மச்சா ஆள் இல்லடா… தூக்குடா பணத்தை… நள்ளிரவில் நைஸாக நுழைந்து… ரூ 15,000 சுருட்டிய மர்ம நபர்கள்… CCTV -யில் அதிர்ச்சி வீடியோ…!

By Swetha on புரட்டாதி 26, 2026

Spread the love

தேவநஹள்ளி தாலுகாவில் உள்ள ஹெக்கனஹள்ளி கிராமத்தில், அடையாளம் தெரியாத நபர்கள் நள்ளிரவில் வீடு புகுந்து சுமார் ரூ 15,000 ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட திருடர்கள், அங்குள்ள லாக்கரை உடைத்து இந்தத் துணிச்சலான கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிப் பதிவுகளில், சந்தேகத்திற்குரிய நபர்கள் வீட்டின் கேட்டைத் திறந்து உள்ளே நுழைவது தெளிவாகப் பதிவாகியுள்ளது. கொள்ளைச் சம்பவத்திற்குப் பிறகு, அக் குற்றவாளிகள் கருப்பு நிற பல்சர் 220 மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றதாகத் தெரிகிறது.

   

https://twitter.com/HateDetectors/status/2103816866112143869/video/1

   

சிக்கஜாலா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்துள்ள இச்சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் இரவு நேர ரோந்துப் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என கிராம மக்கள் காவல்துறைக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி திருடர்களைத் தேடி வருகின்றனர்.