ஹைதராபாத் ராஜேந்திரநகர் காவல் எல்லைக்குட்பட்ட உப்பர்பள்ளியில், 32 வயதான முகமது வசீம் என்பவர் வீதியில் வைத்து கொடூரமாகக் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் வேறு யாருமல்ல, அவரின் நண்பர்களான ஷோயப் மற்றும் இலியாஸ் என்பது தெரியவந்துள்ளது.
சம்பவத்தன்று முகமது வசீமைத் தனியாகச் சந்தித்த அவரது நண்பர்கள் இருவரும், அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வசீமைச் சாலையிலேயே வைத்து அவர்கள் கொடூரமாகக் குத்திக் கொலை செய்துள்ளனர்.
https://twitter.com/TeluguScribe/status/2103351884086165786/video/1
தங்கள் கஞ்சா வியாபாரம் குறித்து காவல்துறைக்கு முகமது வசீம்தான் ரகசியத் தகவல் அளித்து காட்டிக்கொடுத்தார் என்ற பலத்த சந்தேகமே இந்தத் கொடூரக் கொலைக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து ராஜேந்திரநகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள இருவரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
