“இரவில் வெளியே வந்த பெண் மீது தான் தவறு…” பாலியல் குற்றவாளியை காப்பாற்ற துடிக்கும் தாய்… சர்ச்சை பேச்சால் கொந்தளிக்கும் இணையவாதிகள்… பகீர் சம்பவம்…!!

By Devi Ramu on புரட்டாதி 25, 2026

Spread the love

பீகார் மாநிலம் ஜமுய் பகுதியில், பள்ளிச் சிறுமி மற்றும் அவரது நண்பனை வழிமறித்துத் தாக்குதல் நடத்தி, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் நந்தன் யாதவ் என்ற முக்கிய குற்றவாளியைக் காவலாளர்கள் அண்மையில் கைது செய்தனர். இந்தச் சூழலில், கைது செய்யப்பட்ட நந்தன் யாதவின் தாய் அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தனது மகன் எந்தத் தவறும் செய்யவில்லை என்று கூறியுள்ள அந்தத் தாய், “அந்தப் பெண் இரவில் ஒரு ஆணுடன் வெளியே வந்ததே தவறு, எனது மகன் அவளைப் பாதுகாக்கவே முயன்றான்; அவளால் தான் எனது மகன் இன்று சிறையில் இருக்கிறான்” என்று குற்றவாளியை நியாயப்படுத்திப் பேசியுள்ளார். அத்துடன், தனது மகனைக் காப்பாற்றுமாறு அரசியல் தலைவர்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ள அவரது வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகிப் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.

   

இந்த சம்பவத்தைக் சுட்டிக்காட்டி ‘Rebellious 2.0’ என்ற எக்ஸ் பயனர் வெளியிட்டுள்ள பதிவில், பெண்களுக்கு எதிரான குற்ற மனப்பான்மை மற்றும் விக்டிம் பிளேமிங் கலாச்சாரம் என்பது வெறும் ஆண்களால் மட்டும் உருவாக்கப்படுவதில்லை, இதுபோன்ற பிற்போக்குத்தனமான குடும்பச் சூழல் மற்றும் பெண்களின் மனநிலையாலுமே வளர்க்கப்படுகிறது என்று கடுமையாகச் சாடியுள்ளார். குற்றவாளிகளை உருவாக்குவதில் சில தாய்மார்களின் இதுபோன்ற வளைந்துகொடுக்கும் மனப்பான்மை பெரும் பங்கு வகிப்பதாக அவர் தனது ஆதங்கத்தைப் பதிவிட்டுள்ளார்.