விஐபி ஆக இருந்தால் இப்படி பண்ணுவாங்களா…? விமானம் புறப்படுவதற்கு முன்பே கதவை மூடிய விவகாரம்… கொந்தளித்த பயணி… சர்ச்சைக்கு ஏர் இந்தியா அளித்த பகீர் விளக்கம்…!!

By Devi Ramu on புரட்டாதி 25, 2026

Spread the love

சமூக ஆர்வலரான தருண் மிஸ்ரா என்பவர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணிக்க முற்பட்டபோது, விமானம் புறப்படுவதற்கு முன்பே அவரை விமானத்திற்குள் அனுமதிக்க மறுத்த சம்பவம் சோஷியல் மீடியாவில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

மாலை 6:35 மணிக்கு புறப்பட வேண்டிய விமானத்திற்காக 6:20 மணிக்கே போர்டிங் கேட் பகுதிக்கு வந்தடைந்த தருண் மிஸ்ராவை, ஊழியர்கள் உள்ளே அனுமதிக்க மறுத்துள்ளதுடன் அநாகரிகமாகவும் நடந்து கொண்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். “விமானம் இன்னும் புறப்படவே இல்லை, அவசர சூழ்நிலை என்று கூறியும் அவர்கள் அனுமதிக்கவில்லை. இதுவே ஒரு விஐபி ஆக இருந்தால் விமானத்தையே நிறுத்தி இருப்பார்களா?” என அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

   

https://www.instagram.com/reel/DdomeasOTCs/?utm_source=ig_web_copy_link&stkn=MzRlODBiNWFlZA==

   

இச்சம்பவம் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து விளக்கம் அளித்துள்ள ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், “விமானம் புறப்படுவதற்கு 25 நிமிடங்களுக்கு முன்பே போர்டிங் கேட் மூடப்பட்டுவிடும். பயணிகள் உரிய நேரத்தில் வருமாறு பலமுறை அறிவிப்புகளும் செய்யப்பட்டது” எனத் தெரிவித்துள்ளது. இருப்பினும், இச்சம்பவம் குறித்து நெட்டிசன்கள் மத்தியில் காரசார விவாதங்கள் நடந்து வருகின்றன.