உச்சகட்ட கொடூரம்…! பெற்ற தாயை குத்தி கொன்ற 20 வயது மகன்…. ரத்த வெள்ளத்தில் துடித்த பெண் … நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

By Devi Ramu on புரட்டாதி 25, 2026

Spread the love

தெலுங்கானா மாநிலம் ஹனம் கொண்டா மாவட்டம் காசிப்பேட்டையில் உள்ள டி.ஜி.ஐ.எல் காலனி பகுதியில், 40 வயதான உதயஸ்ரீ என்ற பெண் தனது சொந்த மகனாலேயே கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உதயஸ்ரீயின் 20 வயது மகனான தொரபாபு என்பவன், தனது தாயின் நடத்தையில் அதிருப்தியும் சந்தேகமும் அடைந்து வந்துள்ளான். இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த தொரபாபு தான் வைத்திருந்த கத்தியை எடுத்துத் தாயை சரமாரியாகக் குத்தியுள்ளான். இதில் பலத்த காயமடைந்த உதயஸ்ரீ சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

   

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த போலிஸார், உதயஸ்ரீயின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இக்கொடூரச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், கொலையாளி தொரபாபுவைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.