“விவசாயியை சுருட்டி வளைத்த ராட்சத மலைப்பாம்பு….” கழுத்தையும், கைகளையும் இறுக்கி உயிரை குடிக்க முயன்ற கொடூரம்… நடுங்க வைக்கும் வீடியோ…!!

By Devi Ramu on புரட்டாதி 23, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் உள்ள விளைநிலம் ஒன்றில், உள்ளூர்வாசியான இளைஞர் ஒருவர் தனது கால்நடைகளுக்காகப் புல் வெட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது புதருக்குள் மறைந்திருந்த ராட்சச மலைப்பாம்பு ஒன்று, எதிர்பாராதவிதமாக திடீரென அந்த இளைஞரின் மீது பாய்ந்து கொடூரமாகத் தாக்கியுள்ளது.

அந்த மலைப்பாம்பு நொடிப் பொழுதில் இளைஞரின் இரண்டு கைகளையும், கழுத்தையும் சுற்றி வளைத்து மிகக் கடுமையாக இறுக்கத் தொடங்கியது. பாம்பின் கூர்மையான பிடியால் மூச்சுத் திணறி, அந்த இளைஞர் உயிருக்குப் போராடித் துடிதுடித்துள்ளார்.

   

அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு, அருகில் உள்ள வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த சக விவசாயிகள் உடனடியாக ஓடோடி வந்தனர். அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பெரும் போராட்டத்திற்குப் பிறகு, மலைப்பாம்பின் இறுக்கமான பிடியிலிருந்து அந்த இளைஞரை உயிருடன் பத்திரமாக மீட்டனர். விளைநிலத்தில் விவசாயியைக் கழுத்தை நெரித்துக் கொல்ல முயன்ற இந்த மலைப்பாம்பு சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.