“தாயும் மகனும் எங்கே…?” வாய்ஸ் மெசேஜுக்கு பதில் வந்த டெக்ஸ்ட் மெசேஜ்… துண்டு துண்டாக வெட்டி காருக்குள் வீசப்பட்ட உடல்…. தம்பியால் அம்பலமான உண்மை…!!

By Devi Ramu on புரட்டாதி 23, 2026

Spread the love

கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சாரஜா விமான நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவி டீனா பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றி வந்த நிலையில், இவர்களுக்கு 10-ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மகனும் உள்ளார்.

கடந்த ஜூலை 20-ஆம் தேதி வாக்கில் பிரகாஷை அவரது தம்பி போனில் தொடர்பு கொண்டபோது, வழக்கமாக வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் பிரகாஷிடம் இருந்து டெக்ஸ்ட் மெசேஜ் மட்டுமே வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் பிரகாஷின் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டபோது, அவர் இந்தியா சென்றுவிட்டதாகக் கூறியுள்ளனர். ஆனால் அவர் சொந்த ஊருக்கு வராததால் சாரஜா அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

   

சாரஜா போலிஸார் நடத்திய அதிரடித் தேடுதல் வேட்டையில், பிரகாஷின் சொந்தக் காரிலேயே அவரது சடலம் குத்தப்பட்டு, கொடூரமான முறையில் துண்டு துண்டாக வெட்டப்பட்டுக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இக்கொடூரக் கொலைக்குக்குப் பிறகு பிரகாஷின் மனைவி டீனாவும் அவரது மகனும் மாயமாகியுள்ளதால், மனைவியே இக்கொலையில் ஈடுபட்டிருக்கலாம் எனப் போலிஸார் பலத்த சந்தேகம் அடைந்துள்ளனர். தலைமறைவான தாயையும் மகனையும் போலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.