சீச்சீ…! இப்படியா பண்ணுவீங்க…? லிப்டுக்குள் சிறுநீர் கழித்த நபர்…. முகம் சுளிக்க வைக்கும் சம்பவம்…!!

By Devi Ramu on புரட்டாதி 23, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், குடியிருப்பாளர்கள் பயன்படுத்தும் லிஃப்ட்டிற்குள் நபர் ஒருவர் நுழைந்துள்ளார். லிஃப்ட் இயங்கிக் கொண்டிருக்கும் போதே, அவர் எவ்வித கூச்சமும் இன்றி லிஃப்ட்டின் உள்ளேயே சிறுநீர் கழிக்கத் தொடங்கியுள்ளார். ஒவ்வொரு தளமாக லிஃப்ட் நின்று கதவுகள் திறந்தபோதும், அவர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து சிறுநீர் கழித்துக் கொண்டே இருந்த அநாகரீகச் செயல் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் அப்படியே பதிவாகியுள்ளது.

இந்த அருவருப்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் வைரலாகி வருவதுடன், பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பொது இடங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் இதுபோன்ற அருவருப்பான செயல்களில் ஈடுபட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.