என்ன கொடுமை இது…? இரவோடு இரவாக இளம்பெண்ணுக்கு முதியவருடன் திருமணம்…. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…. நெட்டிசன்களின் காரசார விவாதம்…!!

By Devi Ramu on புரட்டாதி 21, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூரில், 18 வயது நிரம்பிய ‘பிங்கி’ என்ற இளம் பெண்ணுக்கு முதியவர் ஒருவருடன் இரவு 11 மணிக்குத் திருமணம் நடந்ததாகக் கூறப்படும் வீடியோ ஒன்று எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது. இந்தச் சம்பவம் உண்மையெனில், சம்பந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு அந்தப் பெண்ணைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஒருவேளை வீடியோ வைரலாவதற்காக மட்டுமே இவ்வாறு செய்யப் பட்டிருந்தால், இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இதனிடையே, ராம்பூர் காவல் துறையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கம், இந்தச் சம்பவம் தொடர்பான முழுமையான விவரங்களை தங்களுக்குப் பகிருமாறு கேட்டுக்கொண்டுள்ளது. அதே நேரத்தில், அப்பெண் தன் சொந்த விருப்பத்தின் பேரிலேயே திருமணம் செய்துகொண்டதாகக் கூறுவதாகவும் நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.