ஐயோ காப்பாத்துங்க… முந்திச் செல்ல முயன்ற கார்… கண் இமைக்கும் நேரத்தில் நொறுங்கிய வாகனங்கள்… 3 பேர் பரிதாப பலி… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

By Swetha on புரட்டாதி 21, 2026

Spread the love

குடகு மாவட்டம் குஷால்நகர்-மடிகேரி நெடுஞ்சாலையில் ஆனேகாடு அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு கார், பைக் மற்றும் பிக்கப் வாகனம் ஆகியவை அடுத்தடுத்து மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்; 7 பேர் பலத்த காயமடைந்தனர். இச்சம்பவத்தில் காரை ஓட்டிச் சென்ற மின்சாரப் பணியாளர் ரத்தன் என்ற உன்னி (36), அவரது சக ஊழியர் ஆதர்ஷ் (26) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளையில், வனத்துறை ஒப்பந்த ஊழியர் குமார் (42) என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

குட்டேஹொசூரில் நடந்த கணேஷ் விசர்ஜன விழாவில் பங்கேற்றுவிட்டு காரில் 7வது ஹோசகோட்டே பகுதிக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது. காரை முந்திச் செல்ல முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார், தொடர்ந்து அவ்வழியே வந்த பிக்கப் வாகனத்தின் மீதும் பலமாக மோதியுள்ளது. இதில் மோட்டார் சைக்கிள் வீசியெறியப்பட்டதோடு, காரும் பிக்கப் வாகனமும் பலத்த சேதமடைந்தன.

   

https://twitter.com/HateDetectors/status/2101952929200828897/video/1

   

இந்த விபத்தில் காரில் பயணித்த சுவின், சந்திரசேகர், அஜய் மற்றும் பிக்கப் வாகனத்தில் இருந்தவர்கள் உட்பட மொத்தம் 7 பேர் காயமடைந்தனர். அவர்களுக்குக் குஷால்நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மைசூரு மற்றும் மடிகேரி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து குஷால்நகர் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.