உத்தரப் பிரதேச மாநிலம் பதாயூன் மாவட்டத்தில் உள்ள அரசுப் பேருந்து நிலையத்தில், நிறுத்தப்பட்டிருந்த ஒரு பேருந்தைக் கடந்து மற்றொரு பேருந்தை ஓட்டுநர் நகர்த்த முயன்றபோது, சுமார் 50 வயதான பிரமோத் என்ற சைக்கிள் ஓட்டி இரண்டு பேருந்துகளுக்கும் இடையே மாட்டிக் கொண்டார்.
சம்பவ இடத்தில் இருந்த பயணிகள் உடனடியாகச் கூச்சலிட்டு எச்சரித்ததால், பேருந்து ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தி பின்னோக்கி நகர்த்தினார். இதனால் பிரமோத் எவ்விதப் பெரிய காயமுமின்றிப் அதிர்ஷ்டவசமாகப் பாதுகாப்பாக மீட்கப்பட்டார். இருப்பினும், அவரது சைக்கிள் கடுமையாகச் சேதமடைந்தது.
அரசுப் பேருந்து ஓட்டுநர்களின் இத்தகைய அலட்சியமான மற்றும் ஆபத்தான போக்குவரத்து செயல்பாடுகள் பயணிகள் மற்றும் வழிப்போக்கர்களின் உயிரைப் பணயம் வைப்பதாகச் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பலரும் தங்களது பலத்த கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
