அண்ணே… எனக்கு ஒரு பாடி மசாஜ்… சலூனுக்குள் புகுந்து ஆர்டர் போட்ட குரங்கு… மிரண்டு போன வாடிக்கையாளர்கள்… இணையத்தில் வீடியோ வைரல்…!

By Swetha on புரட்டாதி 21, 2026

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில் உள்ள ஒரு சலூனுக்குள் எதிர்பாராத விதமாக குரங்கு ஒன்று நுழைந்தது. அங்கு இருந்த வாடிக்கையாளர்களுக்கு எந்த இடையூறும் செய்யாத அந்தக் குரங்கு, அமைதியாக ஒரு நாற்காலியில் சென்று அமர்ந்துகொண்டது. இதைக் கண்டு வியந்த சலூன் கடைக்காரர், அதை விரட்டாமல் அதற்குத் தலையிலும் உடலிலும் இதமாக மசாஜ் செய்யத் தொடங்கினார்.

சலூன் உரிமையாளர் மசாஜ் செய்யச் செய்ய, அந்தக் குரங்கு மிகவும் சௌகரியமாக உணர்ந்து, கண்களை மூடிக்கொண்டு அமைதியாக அதை அனுபவித்தது. வழக்கமாக மனிதர்கள் சலூனில் மசாஜ் செய்துகொள்வதைப் போலவே, குரங்கும் எந்தப் பயமும் இன்றி மசாஜ் செய்துகொண்ட இந்த அபூர்வ நிகழ்வு அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.

   

https://www.instagram.com/reel/DddbOHVC22i/?utm_source=ig_web_button_share_sheet

   

இந்த விசித்திரமான மற்றும் வேடிக்கையான நிகழ்வை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இணையத்தில் வைரலான இந்த வீடியோவைக் கண்ட பயனர்கள் பலர், குரங்கின் சமர்த்தான நடத்தைக்கும், அதை அன்போடு கவனித்துக்கொண்ட சலூன் உரிமையாளரின் அணுகுமுறைக்கும் பாராட்டுகளைத் தெரிவித்து கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.