“சிறுவயதிலேயே திருமணம்…” விடுதி அறையில் மனைவியை கொன்று ஓட்டம் பிடித்த கணவர்… சமாதானம் பேச அழைத்து கொடூரம்… குலை நடுங்க வைக்கும் பயங்கர சம்பவம்…!!

By Devi Ramu on புரட்டாதி 20, 2026

Spread the love

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் புறநகர்ப் பகுதியான தொட்டபள்ளாப்பூரில் உள்ள ‘பசவ பவன்’ அருகே இயங்கி வரும் தங்கும் விடுதி ஒன்றில், 21 வயதான வித்யா என்ற பெண் புதன்கிழமை இரவு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், தனது கணவர் ஆனந்துடன் (29) ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வந்தார்.

சம்பவத்தன்று மதியம் விடுதிக்கு வித்யாவை வரவழைத்த ஆனந்த், மாலையில் அவசரமாக வெளியேறியுள்ளார். இரவு கதவு பூட்டப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள், மாற்றுச் சாவியைப் பயன்படுத்தித் திறந்து பார்த்தபோது வித்யா சடலமாகக் கிடப்பதைப் பார்த்துக் அதிர்ச்சியடைந்தனர்.

   

வித்யாவின் ஐடி கார்டு நாடாவை கொண்டு கழுத்தை நெரித்து ஆனந்த் அவரைக் கொலை செய்திருக்கலாம் என போலிஸார் சந்தேகிக்கின்றனர். மேலும் விசாரணையில், சிறுமியாக இருந்தபோதே வித்யாவை ஆனந்த் திருமணம் செய்தது தெரியவந்ததை அடுத்து, போலிஸார் அவர் மீது கொலை வழக்குடன் போக்சோ சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ஆனந்தை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.