ஆந்திர மாநிலம் கோட்டபல்லியைச் சேர்ந்தவர் மமதா. இவருக்கும் மல்லம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த மணி சந்தர் என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் கணவன்-மனைவி இடையே இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக மமதா தனது பிள்ளைகளுடன் கோட்டபல்லியில் உள்ள பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.
இதனைத் தொடர்ந்து தனது மனைவியையும் குழந்தைகளையும் திரும்ப அழைத்து வர மணி சந்தர் மாமனார் வீட்டிற்குச் சென்றுள்ளார். ஆனால், மமதா அவருடன் வர மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த மணி சந்தர், அங்கு நின்ற கட்டையால் தனது மாமனாரை கடுமையாகத் தாக்கியதுடன், தடுக்க வந்த மனைவி மமதாவின் மூக்கையும் கொடூரமாகக் கடித்துக் காயப்படுத்தியுள்ளார்.
இச்சம்பவத்தில் காயமடைந்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து, அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் கோட்டபல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
