“விநாயகர் ஊர்வலம் முடிந்த சில மணி நேரத்தில் பயங்கரம்…” MTC பேருந்து ஓட்டுநர் அடித்துக் கொலை… நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம்…!!

By Devi Ramu on புரட்டாதி 15, 2026

Spread the love

சென்னை ராமாபுரம் வெங்கடேஸ்வரா நகரில் உள்ள அருள்மிகு ராஜ கணபதி ஆலய விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது, விநாயகர் சிலையைத் தங்கள் தெருவிற்குள் கொண்டு வருவதில் இரு தரப்பினரிடையே நள்ளிரவில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. போலிஸார் தலையிட்டு இரு தரப்பையும் கலைந்து போகச் செய்தனர்.

இருப்பினும், நள்ளிரவில் 2-வது பிரதான சாலையில் உள்ள அனீஸ் என்பவரது வீட்டிற்குச் சென்ற புவனேஷ் மற்றும் அவரது நண்பர்கள், அங்கிருந்தவர்களைக் கீழே வரவழைத்துத் திடீரெனக் கையால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். அப்போது ஆனந்த் என்பவர், எம்.டி.சி பேருந்து ஓட்டுநரான சீனிவாசன் (44) என்பவரின் மார்பில் பலமாகத் தாக்கியதில் அவர் நிலைதடுமாறி சுயநினைவின்றிச் சரிந்து விழுந்தார்.

   

உடனடியாக KK நகரில் உள்ள ESI மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே சீனிவாசன் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த ராமாபுரம் போலிஸார், கொலையில் தொடர்புடைய 5 பேரைக் கைது செய்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.