இடைத்தேர்தலில் அதிமுக தனது வேட்பாளரை முதன்முதலாக அறிவித்து அரசியல் களத்தில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது திமுகவுக்கு பெரும் அரசியல் அழுத்தத்தை உருவாக்கியுள்ளது. பிரதான எதிரியான ‘திமுக VS தவெக’ என்ற தற்போதைய அரசியல் சூழலை மாற்றி, போட்டியைத் ‘திமுக VS அதிமுக’ என்பதாக மீட்டெடுப்பதே எடப்பாடி பழனிசாமியின் இந்த வியூகத்தின் முக்கிய நோக்கம். தேர்தல் களத்திலிருந்து திமுக விலகினால், ‘தவெக VS அதிமுக’ என்ற நிலைக்கு போட்டி மாறிவிடும்.
மாறாக, களமிறங்கி மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டால் அது அக்கட்சியின் செல்வாக்கிற்குப் பலத்த அடியாக அமையும். எனவே, இழந்த களத்தை மீட்டெடுக்க அதிமுக தீவிரமாக முயலும் இந்த சூழலில், தவெகவின் வளர்ச்சியைத் தடுப்பதோடு அதிமுகவின் வியூகத்தையும் முறியடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள திமுக, தனது கூட்டணி பலம், வாக்கு வங்கி மற்றும் ஆட்சி அதிகாரத்தின் பலத்தை நம்பி, நேரடியாகக் களமிறங்கி வெற்றி பெறுவதையே ஒரே தேர்வாகக் கொண்டு முடிவெடுக்கும் வாய்ப்பு அதிகம்.
